Friday, February 6, 2015



அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ' மாதொருபாகனை ' எரித்தமைக்காகவும்  அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள்இ எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர் .யாழ் நூலகத்திற்கு அண்மையில் இந் நிகழ்வு இடம்பெற்றது .இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது .இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஈழத்தில் உள்ள படைப்பாளிகள் எழுத்தாளுமைகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்க்கலாம்.


முதலில் எழுத்தாளன் என்பவன் யார் ? பொழுது போகாமல் முகப்புத்தகத்தில் நாலு வரிகளை எழுதிப் போட்டுவிட்டு லைக்குகளுக்காக காத்திருப்பவனா ? ஊரே எரியும் போது தான் மட்டும் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்று விட்டு அந் நிகழ்வை எழுத்தில் எழுதுவது தான் தன் கடமை என்று எண்ணுபவனா ? அல்லது உலக நீதி இராஜதந்திரம் .தமிழ் ஈழம் என்று புலம்பி விட்டு இணையத்தில் தமிழ் ஈழம் வாங்குபவர்களா ? .இல்லவே இல்லை .எனக்குத் தெரியும் இஎழுத்தாளன் என்பவன் இ புற்களை   இசெடி கொடிஇ பூக்களை கூட சக உயிரினமாக மதிக்கக்கூடியவன் .காக்கை குருவி எங்கள் சாதி என்று தான் அவனால் எழுத முடியும் .எழுத்தாளன் என்பவன் தன் உயிரை விட தன் வாழ்வை விட இந்த பூமியையும் பிரபஞ்சத்தையும் நேசிப்பவன் இஅவனால் அதன் முன் நெக்குருகி கண்ணீர் விட  முடியும் அந்தக் கண்ணீர் தான் அவனுடைய ஒவ்வொரு எழுத்தையும் துலக்கி ஒளிரச் செய்வது .ஆனால் நமது எழுத்தாளர்களோ சோம்பல் பேர்வழிகள் இ ஏதாவது செய்ய வேண்டுமென்றால் இ ஓடி ஒளிந்துவிடுவார்கள் .உயிர்ப்பயம் . பின் எப்படி இவர்கள் மகத்தான இலக்கியங்களை படைக்கப் போகிறார்கள் . ஈழத்தில் இருக்கும் ஒரு சில பெண் எழுத்தாளர்களோ தங்களை pசழஅழவ  செய்வதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள் .என்ன எழுதிக் கிழித்துவிடார்கள் என்று தெரியாது இஆனால் இலக்கிய வாதிகள் .இவர்களிடமிருந்தெல்லாம் இ'எமது மக்களை   காப்பாற்றும் ஆண்டவரே ' என்று ஓலமிட த்தான்  நா எழுகிறது .

சரி இஇவர்கள் தான் இப்படி என்றால் இ எழுத்தாளர்களை ஒன்று திரட்ட  உருவாக்கிய சில அமைப்புக்களோ  இருப்பதிலேயே பயந்தாங்கொள்ளிகளாக இருப்பது மேலும் துயரம் .இப்படியாக தான் இருக்கிறது  எழுத்தாளர்களின் நிலைமை .சமீபத்தில் நடந்து ஓய்வுக்கு வந்திருக்கும் சுன்னாகம் அனல் மின் நிலைய பிரச்சினையின் போது நான் உட்பட எந்த எழுத்தாளர்களும் பொருட்படுத்தும் படியாக எதையும் எழுதிவிடவோ அல்லது செய்துவிடவோ இல்லை .காரணம் அசமந்தம் . பொறுப்பற்ற தன்மை இவேறு என்ன சொல்ல .

எழுத்தாளனுக்கு  சமூகத்தோடு ஏற்பட்டிருக்கும் இடைவெளி பெரியது . எப்படியென்றால்  இசமூகத்திற்கு எழுத்தாளன் என்றால் யார் என்று தெரியாது இஎழுத்தாளனுக்கும் சமூகத்தை தெரியாது . மா -ஓ -சேதுங்கின் உரையொன்றில் எழுத்தாளர்களின் பணியை  அழகாகச் சொல்லுவார் இஎழுத்தாளர்களே எங்கே இருக்கிறீர்கள் இஎங்கிருந்து இலக்கியத்தைப் படைக்கப் போகிறீர்கள் இமக்களிடம் செல்லுங்கள் இஅவர்கள் தான் கதைகள் நிறைந்த பொக்கிஷக் கிடங்கு  .ஆனால் அவர்களிடம் அறிஞர்களின் மொழியில் பேசாதீர்கள் இமக்களின் மொழியில் பேசுங்கள் இஎன்று .

நேற்று புலம்பெயர்ந்து வேறு தேசத்தில் வாழும் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன் இஅவரிடம் இந்தப் பிரச்சினைகளையும் இஎழுத்தாளர்களின் போக்கினையும் சொல்லி கவலைப் பட்டுக் கொண்டேன் .அதற்க்கு இ' நீர் இசுன்னாகம் கழிவு நீர் பிரச்சினை பற்றி ஒரு கவிதையோ கதையோ எழுதினால் அவர்கள் பாராட்டுவார்கள் இஅவ்வளவு தான் ' என்றார்  . அது தான் உண்மையும் .

எழுத்து என்பது என்ன ? எழுத்து என்பது சொல் .சொல்லென்பது சத்தியம் . அது மனித அன்பின்  உருவ வெளிப்பாடு .அது இஎப்போது கலையாகும்  ?அது எப்போது தன்னை தன் முழுமையான அர்த்தத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும் ? .
 பேரன்பு கொண்ட இதயம் எப்போது சொற்களை  தீண்டுகிறதோ இ அப்போது தான் மற்ற எல்லா இதயங்களோடும் அந்தச் சொற்கள் உரையாடத்  தொடங்குகிறது   இஇலக்கியமென்பதே  சமூகத்துடனான முடிவற்ற உரையாடல் தானே இ ஆகவே தான் கேட்கிறேன் இஎன்ன வகையான தயக்கம் இது .என்ன வகையான எழுத்தாளார்கள் நீங்கள் .உங்கள் துணிச்சலும் தீவிரமும் எழுத்தில் மட்டுமல்ல செயலிலும் இருக்க வேண்டும் இஅப்போது தான் சமூகத்திற்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான சுவர் இடிந்து விழும் . அன்பை சொற்களில் மட்டுமல்ல செயலிலும் காட்டுங்கள் .
ஆகவே தான் சொல்லுகிறேன் இஎனதருமை நண்பர்களே இந்த பூமியால் தாங்க முடியாத பேரன்புடன் உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இமுதல் அடியை நிலத்தில் வையுங்கள் இபூமி அசைந்து உங்கள் பாதங்களை வாங்கிக் கொள்ளும் இபூ என்ற சொல்லை எழுத்திப் பாருங்கள்  இசொல் மலர்ந்துவிடும் .


கிரிஷாந் .

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!