Wednesday, February 11, 2015


காட்சி 1

கதாநாயகன் வந்து கொண்டிருக்கிறான்
கால் சூவில் பொறிபறக்க அந்த கதாநாயகன் அறிமுகம், காம வெறிவந்து பெண்ணை முத்தமிடுவது போல் சப்புச் சப்பெண்டு அந்த சிகரட்டை இழுத்துவிட்டு வில்லனின் பஜிரோ மீது சுண்டிவிடுகிறான் ஒரு பஞ்ச்டயலொக்குடன், வெடித்துப்புகைகிறது பஜிரோ, ஹீரோயிசம் புகை இரண்டுக்கும் எவ்வளவு சம்பந்தம் என்பதைப்பற்றிய திரைக்கதையை மையமாக்கொண்டதே இந்த திரைப்படம்

காட்சி 2

குழந்தை வருகிறாள் நான் அவளைப்பார்த்து சிரித்து விட்டு ஏன் தனியாக நிற்கிறாய் என்று கேட்கிறேன்
அப்பா என்று காட்டுகிறாள், கடையின் முன்னால் நின்று சிகரெட் பத்தியபடி ஒரு கடைசி உறிஞ்சு உறிஞ்சி விட்டு வருகிறார் தகப்பன், ஒரு அசட்டு சிரிப்புடன் எனைப்பார்த்து ஒரு சொட் பத்திட்டு வாறதுக்குள்ள என்டு சொல்லி முடிக்காமலே குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார் குழந்தையின் கன்னத்தின் குழியில் அந்தப்புகை இறங்கிவிடுகிறது

காட்சி 3 மற்றும் காதல் காட்சிகள்

அது ஒரு பான்டசி மூவி ஹீரோவை ஒரு தீவுக்குள் இறக்கிவிடுகிறோம்
முப்பது நாட்கள் பிழைக்குமாறு அவர் சிகரெட்டை எடுத்துப்பத்த வைக்கிறார் ஒரு பெண் ஓடிவருகிறாள் தேவதை மாதி பெண் அவருக்கு முன்னால் வந்து தன்னை முத்தமிட சொல்கிறாள் ஆச்சரியம் தாங்காமல் காரணம் அறிய கேட்கிறார் ஹீரோ இந்த தீவில் சிகரெட் பத்தவைத்தால் முத்தமிடுவது வழக்கம் !!
முத்தமிட்டு சென்று விட்டாள், இப்போது முதலாவது புகை விட , ஒரு பருத்த தடியன் தனது குறியை உருவிக்கொண்டு வருகிறான் !! இங்கே ஒரு தடவை சிகரெட் புகை விட்டால் அங்கே முத்தமிடச் செய்வோம்

காட்சி 3 இன் இதரகாட்சிகள் மற்றும் பான்டசி கலக்காதவை

பிறஸ் பண்ணிவிட்டு
முத்தமிடுதல் தவறில்லை என்கிறான் ஒரு  பின்நவீனத்துவக்கவிஞன் ஆஸ் ரே நிறைய இந்த இரண்டு லைன்னையும் எழுதிமுடிக்கிறான்
நட்பை பரிமாறிக்கொள்ள சிகரெட்டை பாதி உறிஞ்சி விட்டுக்குடுக்கிறான் நண்பன் பக்ரவுண்ட் மியூசிக்காக துக்கம் கலந்த நட்பு பாடல் வரவேண்டும் .

காட்சி 4 இரண்டாம் புகை

போகுமிடமெல்லாம் புகை ஒரு காதலித்து திருமணமான ஜோடி மனைவிக்கு ஆஸ்துமா்கணவன் செயின் சுமோக்கர் ஒரு கட்டத்தில் இவனாலும் சிகரெட்டை விட முடியாமல் மனைவி மீதிருந்த காதலால் பிரிகின்றனர் என்று தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறேன் மக்கள் இதை பெரிதாக ரசிக்கமாட்டார்கள் இன்னும் ஆர்வமாக இதை மாத்துமாறு கேட்டதால்
மனைவி கணவன் மேலிருந்த அன்பால் இதை பற்றி அவனிடம் சொல்லாமல் மறைத்து இறுதியில் ஆஸ்துமா அஅதிகரித்து இறந்து விட்டாள் , கணவனுக்கு விசயம் தெரியவரவே அவன் மனசாட்சியே இறுதியில் அவனை கொன்று விடுகிறது ஆனால் வைத்தியசாலை ரிப்போர்ட்டில் அவன் நுரையீரல் புற்றுநோயால் இறந்ததாககூறப்படுகிறது இறுதியில்
Smoking kills என்று திரைப்படம் முடியும்

காட்சி- 6

சில Fetish படங்களில் இரும்புக்கம்பியை பழுக்க காய்ச்சி உடம்பில் சூடு போடுவார்கள் அதைவிட மோசமானது குழந்தைகளுக்கும் மக்கள் இருக்கும் இடத்தில் புகைப்பது அதற்கும் மேலே சுவாசிக்கும் வளியை fetish தனமாக புணர்வது போன்றது சிகரெட் பாவனை ,
இந்தப்படத்திலும் விபச்சாரிகளை நாடிச்சென்று சிகரெட்டால் சுடும் பணக்காரகிழவனே வில்லனாக இருப்பார்

காட்சி 7

இந்த திரைப்படத்தில் புகைத்தலில்லாத ஒரு காட்சிகளும் இருக்காது என்பதால் subtitle கு பதிலாக smoking injurious to health என்பது ..



                                              -ஆதி பார்த்தீபன்

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!